"அமெரிக்காவும் இங்கிலாந்தும் செங்கடலை குருதிக்கடல் ஆக்கிவிட்டனர்" - ஹவுதீஸ் மீதான தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கண்டனம்
அமெரிக்காவும் இங்கிலாந்தும் செங்கடலை ரத்தக் கடலாக மாற்றி வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஹவுதீஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏமன் அருகே செங்கடலின் மீது வான்தாக்குதல் நடத்தின.
இதனைக் கண்டித்து இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற எர்டோகன், இஸ்ரேல் பிரதமரை நாஜித் தலைவர் ஹிட்லருடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார். அதிகப்படியான ராணுவ பலம் பயன்படுத்தப்படுவதாகவும் துருக்கி அதிபர் தெரிவித்தார்.
Comments